கோஷ்டி மோதலில் பயங்கரம்; கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கோஷ்டி மோதலில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2022-09-11 21:06 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் யரகட்டி தாலுகா முகலிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன்கவுடா பட்டீல்(வயது 20). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்டார். விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்த பின்னர் அர்ஜூன் கவுடாவும், அவரது நண்பர்களும் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் அர்ஜூன் கவுடாவை குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அர்ஜூன்கவுடா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்