காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; காவல் அதிகாரி உயிரிழப்பு, சி.ஆர்.பி.எப். வீரர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழந்ததுடன், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.;

Update: 2022-10-02 11:33 GMT



புல்வாமா,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே புல்வாமா மாவட்டத்தில் பிங்லானா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் இணைந்து கூட்டாக பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், திடீரென பயங்கரவாதிகள் கூட்டு படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்து உள்ளார். சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளன. அந்த பகுதியை சுற்றி வளைத்து வீரர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கு முன் சோபியான் மாவட்டத்தில் பஸ்குச்சான் பகுதியில் இன்று நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர். அந்த பயங்கரவாதி நசீர் அகமது பட் என அடையாளம் காணப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்