பாக்கு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து

ஒசநகரில் பாக்கு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 400 மரங்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-03-13 04:30 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா மூடுகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ரமண பிரசாத். விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்தப்பகுதியில் பாக்கு தோட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, மளமளவென அங்குள்ள பாக்கு மரங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் அங்கிருந்த 400 மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒசநகர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கடும் வெயில் மற்றும் காற்று காரணமாக, பாக்கு மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஒசநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்