ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.;
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சட்டவிரோத பண பரிமாற்ற விசாரணையை அமலாக்கத்துறை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு அங்கமாக, அமலாக்கத்துறை நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் பெர்ஹைட், ராஜ்மகால் ஆகிய நகரங்களில், பங்கஜ் மிஸ்ராஉள்பட சிலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.