மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும்: சந்திரசேகர் ராவ் நம்பிக்கை

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது. இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம் என்று சந்திரசேகர் ராவ் கூறினார்.

Update: 2023-04-15 05:21 GMT

ஐதராபாத் : தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும் என கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பாரதிய ராஷ்டிர சமிதி மராட்டியத்தில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது. இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம்.

ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்' என்று கூறினார். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தலித் பந்து திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார். இந்த திட்டத்தின் கீழ், தலித் குடும்பத்தினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது. இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம் என்று சந்திரசேகர் ராவ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்