தெலுங்கானா: நள்ளிரவில் 20 தெருநாய்கள் சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை

முகமூடி அணிந்தபடி காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் தெருநாய்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.;

Update:2024-02-17 18:45 IST
தெலுங்கானா: நள்ளிரவில் 20 தெருநாய்கள் சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை

கோப்புப்படம் 

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் சுமார் 20 தெருநாய்களை சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும் பல்வேறு நாய்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்தபடி காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் தெருநாய்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்