6 வயது சிறுவனை செங்கலால் அடித்துக்கொன்ற 13 வயது சிறுவன் - நிர்வாண நிலையில் உடல் மீட்பு

6 வயது சிறுவனை செங்கலால் அடித்துக்கொன்ற 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Update: 2023-07-02 14:42 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் சிவில் லைன் பகுதியை சேர்ந்தவர் யோகேந்திரா. இவரது 6 வயது மகன் யோக். வீட்டில் இருந்த யோக் இன்று மதியத்தில் இருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை யோகேந்திரா காணாமல் போன மகனை தேடியுள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகே யோக் பிணமாக கிடப்பதை கண்டு யோகேந்திரா அதிர்ச்சியடைந்தார்.

சிறுவன் யோகின் தலையில் செங்கலால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுவன் உடலில் ஆடையின்றி நிர்வாண நிலையில் செங்கலால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் யோக்கை செங்கலால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த 13 வயது சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 வயது சிறுவனை 13 வயது சிறுவன் அடித்துக்கொன்றதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்