அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கு வாலிபருக்கு ஓராண்டு சிறை

அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கு வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-09 18:45 GMT

உப்பள்ளி:-

தார்வார் விவசாய பல்கலைக்கழகம் அருகே கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அரசு பஸ் டிரைவர் மஞ்சுநாத் என்பவரை லட்சுமண மோரே என்ற வாலிபர் தாக்கினார். இது குறித்து தார்வார் புறநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தாக்குதல் நடத்திய லட்சுமண மோரே கடந்த 6 மாதத்திற்கு முன்பு தார்வார் விவசாய பல்கலைக்கழகம் அருகே அரசு பஸ்சிற்காக காத்திருந்தபோது அந்த வழியாக அரசு பஸ் ஒன்றை நிறுத்தி உள்ளார்.

ஆனால் அதில் டிரைவராக இருந்த மஞ்சுநாத் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமண மோரே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மஞ்சுநாத்தை தாக்கியதாக தெரியவந்தது. இதையடுத்து லட்சுமண மோரேவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தார்வார் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இறுதி தீர்ப்பு வெளியானது. அப்போது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட லட்சுமண மோரேவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்