கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 50 ஆண்டு சிறை

கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-28 23:25 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் குன்னம்குளம் போர்குளத்தை சேர்ந்தவர் சாயுஜின் (வயது 34). இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பாக போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாயுஜினை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை குன்னம் குளம் அதிவிரைவு சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் சாயுஜின் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்