தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு

தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-09-21 19:30 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா அருகே உள்ள கத்ரிகம்பளா பகுதியை சேர்ந்தவர் அனுராதா. இந்த மூதாட்டி கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி அந்தப்பகுதியில் நடந்து சென்று ெகாண்டிருந்தார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த அதே பகுதியை சோ்ந்த முகமது நிசார் மற்றும் ஜூரைஸ் ஆகியோர், மூதாட்டி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியை பறித்ததாக முகமது நிசார், ஜூரைஸ் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த தாராகுமாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி மதுகர் பகவத் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது தாராகுமாரி, ஜூரைஸ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாதால் அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் முகமது நிசாருக்கு 3 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்