தார்வார் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

தொழிலாளியை கத்தியால் குத்தியதற்கு வாலிபருக்கு தார்வார் மவாட்ட கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Update: 2023-09-01 18:45 GMT

உப்பள்ளி:-

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா திம்மாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்போஜி சவான் (வயது35). இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. சம்போஜி நிலத்தின் அருகே தொழிலாளியான சிவலிங்காவுக்கும் இடம் உள்ளது. இதனால் இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு சிவலிங்கா தனது நிலத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த சம்போஜி, சிவலிங்காவிடம் தகராறு செய்தார். அப்போது சம்போஜி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்காவை குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து குந்துகோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலிங்காவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு தார்வார் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரண நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி ஜெய்ரால்டு தீர்ப்பு கூறினார். அதில், தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் சம்போஜிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்