பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது...!

கர்நாடகாவில் பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-11-23 07:27 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் நாகமங்களா பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவருக்கும் அப்பகுதியில் வசித்து வந்த 8 ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த மாணவிக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து வீடியோ கால் மூலமாக யூசுப் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மாணவியின் சில அந்தரங்க காட்சிகளை வீடியோ காலில் யூசுப் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளை வைத்து கொண்டு மாணவியை ஆசைக்கு இணங்குமாறும், மறுத்தால் பதிவுகளை வெளியிட்டு விடுவேன் என கூறியும் மிரட்டி இருக்கிறார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நிலையில், பாட்டி வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். இதையறிந்து சென்ற யூசுப், மாணவி மூலமே அவரின் பாட்டிக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, மதம் மாறினால் திருமணம் செய்து கொள்கிறேன் என யூசுப் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீடு திரும்பிய பெற்றோர் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு மாணவிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து யூசுப் மீது போலீசில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் யூசுப்பை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்