சாகரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சாகரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-04 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா வரதஹள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சாகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வரதஹள்ளி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சாகர் டவுன் ராம்நகர் பகுதியை சேர்ந்த அகமது உசேன் (வயது33) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அகமது உசேனிடம் இருந்து 53 கிராம் கஞ்சாைவ பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்