குடிபோதையில் காரை இயக்கி 5 கார்களை சேதப்படுத்திய வாலிபர் கைது
உடுப்பி அருகே, குடிபோதையில் காரை இயக்கி 5 கார்களை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மங்களூரு;
பெங்களூருவை சே்ாந்தவர் சுகாஸ். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுகாஸ், தனது நண்பரின் திருமண விழாவில் கலந்துகொள்ள உடுப்பிக்கு வந்தார்.
உடுப்பியில் உள்ள மதுபான விடுதிக்கு சுகாஸ் தனது நண்பர்களான பரத், நவீன், கல்யாண், நிர்மல் உள்ளிட்ட 5 பேருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திவிட்டு அவர்கள் 6 பேரும் காரில் அங்கிருந்து செல்ல முயன்றனர்.
காரை சுகாஸ் ஓட்டினார். அப்போது குடிபோதையில் இருந்த சுகாஸ், காரை தாறுமாறாக ஓட்டி 5 கார் மீது மோதி சேதப்படுத்தினார். இதுகுறித்த புகாரின்பேரில் மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் காரை இயக்கி 5 கார்களை சேதப்படுத்திய சுகாசை கைது செய்தனர்.
மேலும் 5 பேரை எச்சரித்து அனுப்பினர்.