காலி பங்களாவில் டீன்-ஏஜ் சிறுமி... 14 மணிநேரம் பலாத்காரம்; 8 பேர் கொண்ட கும்பல் கைது

மராட்டியத்தில் காலி பங்களாவில் டீன்-ஏஜ் சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் 14 மணிநேரம் பலாத்காரம் செய்த அவலம் நடந்து உள்ளது.;

Update: 2022-12-18 16:36 GMT



பால்கர்,


மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் காலி பங்களா ஒன்று உள்ளது. இதில் 16 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளது.

இதுபற்றி பால்கர் மாவட்ட ஊரக போலீசார் கூறும்போது, அந்த சிறுமி அளித்த புகாரில், கடந்த 16-ந்தேதி இரவு 8 மணியில் தொடங்கிய இந்த கொடூரம் அடுத்த நாள் காலை 10 மணி வரை நீடித்துள்ளது.

அந்த சிறுமியை மாகிம் கிராமத்தில் உள்ள பங்களா ஒன்றுக்கு அந்த கும்பல் அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளது. இதன்பின்னர், சிறுமியை பங்களாவில் இருந்து வெளியே அழைத்து கொண்டு கடற்கரையோரம் சென்றுள்ளது.

இதன்பின்பு, புதர் மறைவில் மீண்டும் அந்த கும்பல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து புகாரை பெற்று கொண்ட போலீசார், பல்வேறு தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்