சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; பணம் தர மறுத்ததால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட கொடூரம்

ரூ.2.50 லட்சம் கேட்டு மிரட்டிய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார்.;

Update: 2022-10-01 10:54 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிஷான்கர் பாஸ் கிராமத்தை ஷகில் என்ற இளைஞருடன் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பழகியுள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சிறுமிக்கு போன் செய்த ஷகில் ஆசைக்கு இணங்க மறுத்தால் தன்னிடம் உள்ள ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி ஷகில் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு, காத்திருந்த ஷகில் உள்பட 8 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

அதன் பின்னர், தங்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி 8 பேரும் சிறுமியை கடந்த ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 6-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், தாங்கள் எடுத்த வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தரும்படி அந்த சிறுமியிடம் மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து மிரட்டிய அந்த கும்பல் சிறுமி பணம் தராததால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ குறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பணம் கேட்டு மிரட்டிய ஷகில், அர்பஸ், அக்ரம், ஜாவித், முஸ்டகியூம், தலீம், சல்மான், அக்ரம் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்