மார்பிங் படங்களை வெளியிடுவதாக மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பையின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள தலோஜாவை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, வாலிபர் ஒருவர் சமீபத்தில் அறிமுகமானார்.
இந்த நிலையில் வாலிபர், சிறுமியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அவளுக்கு அனுப்பியதாக தெரிகிறது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியுள்ளார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி உடனடியாக சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தாள். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.