நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு தொழில்நுட்பம் முக்கியம்: பிரதமர் மோடி பேச்சு

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு தொழில்நுட்பம் முக்கியம் என தேசிய தொழில்நுட்ப தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.

Update: 2023-05-11 08:59 GMT

புதுடெல்லி,

    

நாட்டில் தேசிய தொழில்நுட்ப தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 2047-ம் ஆண்டுக்கான ஒரு குறிப்பிட்ட இலக்குகளை நாம் கொண்டிருக்கிறோம்.

நமது நாட்டை நாம் வளர்ச்சி அடைந்த நாடாகவும், சுய சார்புடைய ஒன்றாகவும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது நீடித்த வளர்ச்சி இலக்குகள் அல்லது புதிய கண்டுபிடிப்புகளுக்காக, எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்புக்கான நடைமுறையை உருவாக்குவது என ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தொழில் நுட்பம் முக்கியம் வாய்ந்தது என பேசியுள்ளார்.

ஒவ்வொரு திசையிலும் இந்தியா இன்று முன்னோக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு தொழில் நுட்பம் சார்ந்த நாட்டுக்கு அது அவசியம்.

2014-ம் ஆண்டில், புதிய தொழில் முனைவோர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளை, வர்த்தகம் சார்ந்த நடைமுறைக்கு மாற்றுவதற்கு வழியமைத்து தரும் மையங்கள் நம்மிடம் 10 என்ற அளவிலேயே இருந்தன. ஆனால், தற்போது அவை 650-க்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளன என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்