பாவிகள் கலந்துகொண்டதால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி - மம்தா பானர்ஜி

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேரில் சென்று இருந்தனர்.

Update: 2023-11-23 13:46 GMT

கொல்கத்தா,

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் "பாவிகள்" கலந்து கொண்ட போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறினார். இது தொடர்பாக கொல்கத்தாவில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது: உலக கோப்பையில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்திய வீரர்கள் பாவிகள் கலந்து கொண்ட போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்" என்றார்.

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேரில் சென்று இருந்தனர். இந்த நிலயில், மம்தா பானர்ஜி இவ்வாறு விமர்சித்து இருப்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக ராகுல் காந்தியும் இதே போன்று விமர்சித்து இருந்தார். ராகுல் காந்தி கூறியிருந்ததாவது, பிரதமர் மோடி, டி.வி.யில் தோன்றி 'இந்து-முஸ்லிம்' என்று பேசுவார். சில நேரங்களில் கிரிக்கெட் போட்டியை பார்க்க செல்வார். ஆனால், இந்திய அணி தோற்று விடும் என்பது வேறு விஷயம். அபசகுனம் பிடித்தவர். 'பி.எம். என்றால் பனாட்டி (அபசகுனம்) மோடி' என்று அர்த்தம்." என்று கூறியிருந்தார். ராகுலின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பை பாஜக தெரிவித்து இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்