மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியரை அடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற மக்கள்
டியூசன் ஆசிரியர் நடந்துகொண்ட விதத்தை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள விரார் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். அப்போது அவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆசிரியரின் தொல்லைகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், டியூசன் செல்வதை நிறுத்தியுள்ளார்.
திடீரென டியூசன் செல்லாததன் காரணம் என்ன என மாணவியின் பெற்றோர் கேட்கும் போதுதான் டியூசன் ஆசிரியரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டியூசன் ஆசிரியர் நடந்துகொண்ட விதத்தை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு கொதிப்படைந்த மாணவியின் பெற்றோர், சக உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சேர்ந்து டியூசன் ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரின் ஆடைகளை அவிழ்த்து ஊர்வலமாக இழுத்துச்சென்றனர். இறுதியில் அவரை போலீசில் ஒப்படைத்தனர். டியூசன் ஆசிரியரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டியூசன் ஆசிரியரால் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார், தெரிவித்துள்ளனர்.