மாணவனை வகுப்பறையிலேயே மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை...! வீடியோ வைரல்
அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனை மசாஜ் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.;
லக்னோ,
ஆசிரியர் பணி என்பது, அபரிமிதமான சக்தி வாய்ந்த பணி. அத்தகைய ஆசிரியர் பணியை வெட்கித் தலை குனியும்படி, ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் செயலே மற்ற ஆசிரியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர், தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் கூறுகிறார்.
இதையடுத்து அந்த மாணவன், நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியைக்கு மசாஜ் செய்கிறார். அப்போது, வகுப்பறையில் மற்ற மாணவ - மாணவியரும் அமர்ந்து உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது குறித்து, ஹர்தோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங் கூறுகையில், "இந்த காணொளியை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் வெளிச்சத்திற்கு வந்தது என தெரிவித்தார்.