'இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.;
கேங்டாக்,
சிக்கிம் மாநிலத்தில் கேங்டாக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நாட்டில் இயற்கை சார்ந்த வேளாண் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை, 1 மில்லியன் டாலர்களிலிருந்து 1 பில்லியன் டாலராகக் வரும் 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும் என்பதே எங்கள்து இலக்கு. இது சாத்தியமாகும் என எனக்கு 100% நம்பிக்கை உள்ளது.
இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். ஒரு பிரமாண்டமான இயற்கை சார்ந்த மாநிலமாக உருவாகும் ஆற்றல் சிக்கிம் மாநிலத்திற்கு உள்ளது. இதனை அடைந்தால் மாநிலம் வளர்ச்சி பெரிதும் உயரும்.
அதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள சுற்றுலா துறையும் வளர்ச்சியடையும். இதற்காக, மத்திய அரசின் சார்பில் அதிக தரம் வாய்ந்த, நவீன வசதிகளுடன் கூடிய, இயற்கை பரிசோதனை ஆய்வகம் ஒன்றை அமைக்க இருக்கிறோம். இது நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும்."
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.