தமிழ்நாடு, கர்நாடகாவின் சகோதர மாநிலம்

தமிழ்நாடு, கர்நாடகாவின் சகோதர மாநிலம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-04 21:00 GMT

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதுதொடர்பாக நேற்று பெங்களூருவில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, கர்நாடகாவின் சகோதர மாநிலம். இங்கு(கர்நாடகம்) உள்ளவர்கள் அங்கு(தமிழ்நாடு) வேலை பார்க்கிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் வேலை பார்க்கிறார்கள். எனவே எந்த ஒரு விஷயத்திற்காகவும் இரு மாநிலமும் சண்டையிடக்கூடாது. நேரம் கிடைக்கும்போது இரு மாநில அரசும் அமர்ந்து பேசி மேகதாது உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டுடன் நாங்கள் எந்த விஷயத்திலும் யுத்தம் செய்ய தயாராக இல்லை. அவர்கள் நம் சகோதரர்கள். லட்சக்கணக்கான மக்கள் ஓசூர் பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக அனைவரும் அமர்ந்து பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்