நிலுவையில் உள்ள மசோதாக்கள்; சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2023-10-31 03:26 GMT

புதுடெல்லி,

மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள கவர்னர் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பன உள்ளிட்ட 13 மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்