மணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய மணிப்பூர் செல்ல தமிழக அரசு குழு திட்டம்.!

மணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய அம்மாநிலத்திற்கு தமிழக அரசின் குழு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-07-22 09:33 GMT

சென்னை,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சமயத்தில் மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த இரு தினங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டன. மணிப்பூரில் வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூரில் உள்ள 4 ஆயிரம் தமிழர்களின் நிலையை அறிய அம்மாநிலத்திற்கு தமிழக அரசின் குழு விரைவில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஒருவரின் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலை பற்றி அம்மாநில அரசுடன் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்