தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு செய்து கொடுக்கப்படும் - கேரள தலைமைச் செயலாளர் உறுதி

தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Update: 2023-12-14 04:08 GMT

கோப்புப்படம் 

திருவனந்தபுரம்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனையொட்டி, முதல்-அமைச்சர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கேரள மாநில தலைமைச் செயலாளர் வி.வேணுவிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநில தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்