'மகளை கவனித்துக்கொள்' ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானி மனைவியிடம் கூறிய கடைசி வார்த்தை...

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானி தனது மனைவி ‘மகளை கவனித்துக்கொள்’ என கடைசியாக கூயுள்ளார்.

Update: 2022-10-19 05:57 GMT

சென்னை,

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் இந்து மத கோவிலில் வழிபாடு செய்துவிட்டு குப்தகாசிக்கு தனியார் நிறுவன ஹெலிகாப்டரில் நேற்று 6 பக்தர்கள் சென்றனர். விமானத்தை மராட்டியத்தை சேர்ந்த அனில் சிங் (57) இயக்கினார்.

மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த விமானி அனில் சிங் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விபத்து நடைபெறுவதற்கு முன் தனது மனைவியிடம் அனில் சிங் பேசியது தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

மராட்டியத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் அனில் சிங்கிற்கு ஷெரின் ஆனந்திதா என்ற மனைவியும் பிரோசா சிங் என்ற மகளும் உள்ளனர்.

தனது கணவர் தன்னிடம் கடைசியாக பேசியது என்ன? என்பது குறித்து அனில் சிங்கின் மனைவி ஷெரின் கூறுகையில், அவர் கடைசியாக என்னிடம் நேற்று (திங்கட்கிழமை - நேற்று முன் தினம்) பேசினார். என் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. மகளை கவனித்துக்கொள் என அவர் என்னிடம் கூறினார்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்