தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத தாசில்தாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத தாசில்தாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்.
எலகங்கா:
பெங்களூரு எலகங்கா மண்டல தாசில்தாராக இருந்து வருபவர் அனில்குமார். பெங்களூரு மாவட்டம் குத்தனஹள்ளி கிராமத்தில் உள்ள நிலம் குறித்த தகவல்களை அளிக்கும்படி ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் கோபால கவுடா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். ஆனால் அந்த நிலம் குறித்த தகவல்களை தாசில்தார் அனில்குமார், என்ஜினீயர் கோபாலகவுடாவுக்கு வழங்கவில்லை. இதனை எதிர்த்து தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் கோபால கவுடா வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல்களை அளிக்காத தாசில்தாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அந்த அபராதத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் பெங்களூரு மாவட்ட கலெக்டர் தயானந்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.