மாயமான வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

மைசூரு செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-22 18:45 GMT

மங்களூரு:

மைசூரு செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அழுகிய நிலையில்...

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகாவிற்கு உட்பட்டது நெல்லிகுந்தே கிராமம். இந்த கிராமத்தின் புறநகர் பகுதியில் ஒரு மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக விட்டலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர், தூக்கி தொங்கிய பிணத்தை மீட்டனர். அப்போது அது அழுகிய நிலையில் இருந்தது. இதனால் இறந்தவர் குறித்த தகவல் முதலில் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேடுமோலே கிராமத்தைச் சேர்ந்த வீரப்பா என்பவரின் மகன் கமலக்சா(வயது 32) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூருவுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து உடைமைகளை எடுத்து கொண்டு கமலக்சா சென்றதாகவும், ஆனால் அதன்பின்னர், அவர் வீட்டை தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிந்தது.

கொலையா?

பல நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் பயந்துபோன குடும்பத்தினர் பலரிடம் விசாரித்து வந்துள்ளனர். ஆனால் எந்த தகவலும் இல்லை. எனினும் மகன் வீட்டிற்கு வந்துவிடுவார் என நினைத்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் கிராமத்தின் புறநகர் பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மைசூருவுக்கு புறப்பட்ட வாலிபா் கிராமத்தின் புறநகர் பகுதியில் வந்து மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டாரா? என தெரியவில்லை. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராமத்தினரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்