ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு ஆச்சரியமளிக்கும் வகையில் மக்கள் ஆதரவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பொதுமக்கள் ஏற்றும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.

Update: 2022-08-14 05:25 GMT

புதுடெல்லி,



இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பொதுமக்கள் ஏற்றும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களில் பல்வேறு மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து மற்றும் சோதனை பணியும் நடந்து வருகிறது.

நாட்டில் ஓராண்டு கால சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹர்கர் திரங்கா என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஆகஸ்டு 13-ந்தேதி முதல் வரும் 15-ந்தேதி (நாளை) வரை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.

இதன்படி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மந்திரிகள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். பொதுமக்களும் அதனை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் தேசிய கொடியேற்றி வருகின்றனர். திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களுடைய இல்லங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளனர்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு ஆச்சரியப்படும் வகையில் மக்கள் அளித்து வரும் ஆதரவால் அதிக மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளேன்.

வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உள்ள மக்கள் இதில் பங்கு பெறுவதனை நாம் காண முடிகிறது. இதுவே ஆசாதி கா அம்ரித் மகோத்சவ கொண்டாட்டத்தின் ஒரு சிறந்த வழியாகும் என தெரிவித்து உள்ளார். தேசிய கொடியுடன் உள்ள புகைப்படங்களை harghartiranga.com என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளும்படியும் பிரதமர் மோடி மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்