கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு 14,500 கன அடியாக உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

Update: 2024-08-30 06:43 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 14,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கன அடியும், கபினி அணையில் இருந்து 4,500 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்