வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிராக பதில் அளிக்க கூடுதல் அவகாசம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிராக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் அளித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-07-11 20:53 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிராக அஸ்வினி குமார் உபாத்யாய், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று விசாரணையின் போது இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.

இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க அக்டோபர் 31-ந் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்ததுடன், மனுக்கள் நிலுவையில் இருப்பதால் சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்