புகைப்பிடிக்கும் வயதை 21 ஆக உயர்த்தக் கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
புகைபிடிக்கும் வயதை உயர்த்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.;
புதுடெல்லி,
புகைபிடிக்கும் வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. புகைபிடிக்கும் வயது வரம்பை 21 ஆக உயர்த்த கோரி வழக்கறிஞர்கள் சுபம் அவஸ்தி மற்றும் சப்த ரிஷி மிஸ்ரா ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். "உங்களுக்கு விளம்பரம் வேண்டுமென்றால், ஒரு நல்ல வழக்கை வாதிடுங்கள். விளம்பர நல வழக்குகளைத் தாக்கல் செய்யாதீர்கள்," என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
கல்வி, சுகாதார நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே சிகரெட்டுகளை விற்பனை செய்வதைத் தடை செய்வதோடு, வணிக இடங்களிலிருந்து புகைபிடிக்கும் பகுதிகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை வெளியிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.