பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு

பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update: 2023-01-16 22:10 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேலின் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நேரமின்மை காரணமாக விசாரணையை பிப்ரவரி 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தபோது, பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்கவும், கைது செய்ய தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் நிராகரித்தது.

Tags:    

மேலும் செய்திகள்