கிராமங்களுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம்

சிக்பள்ளாப்பூரில் வறட்சி பாதித்த 27 கிராமங்களுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Update: 2023-09-23 18:45 GMT

சிக்பள்ளாப்பூர்

கர்நாடகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. குறிப்பாக சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குடிப்பதற்குக்கூட நீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக சிக்பள்ளாப்பூரில் சிட்லகட்டா, பாகேபள்ளி, சிந்தாமணி உள்பட 6 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தாலுகாக்களில் உள்ள 27 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தாலுகா நிர்வாகம் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய ஆழ்துளை கிணறுகளை தோட்டியுள்ளது.

இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டியும் பருவமழை பொய்த்துபோனதால் நீர் இல்லாமல் போனது. இதனால் கிராமமக்களுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்று வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ணபைரேகவுடாவிற்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ணபைரேகவுடா சம்பந்தப்பட்ட தாலுகா நிர்வாக அதிகாகிகளை சந்தித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும்படி உத்தரவிட்டார். அ

தன்படி 27 கிராமங்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து சார்பில் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல கவுரிபிதனூர், குடிபண்டேபாளையா உள்பட 9 வார்களுக்கு தனியார் ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்