கா்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூருவில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அஸ்வத்நகரில் வசித்து வருபவர் கிரண். இவரது மனைவி மதுஸ்ரீ(வயது 26). இவர் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுஸ்ரீ தனது கணவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் எச்.ஏ.எல். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுஸ்ரீயின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த நிலையில் கிரணும், அவரது தாயும் கொடுத்த தொல்லையால் தான் மதுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் கிரண், அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.