ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து
ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.;
ஐதராபாத்,
ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து செகந்திராபாத் வந்துகொண்டிருந்த விரைவு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ரெயிலில் இருந்து இறங்கினர். இந்த ரெயில் விபத்தில் தற்போதுவரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
ஓடும் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அனைத்து பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.