கர்நாடக பள்ளிக்கல்வித்துறையின் பெயர் திடீர் மாற்றம்

கர்நாடக பள்ளி கல்வித்துறையின் பெயர் திடீரென மாற்றப்பட்டுள்ளது.;

Update:2022-06-26 04:54 IST

பெங்களூரு: 

கர்நாடக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கர்நாடக பள்ளிக்கல்வித்துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பள்ளிகல்வித்துறை இனி பள்ளிகல்வி மற்றும் எழுத்தறிவு துறை என்று அழைக்கப்படும். இந்த பெயர் மாற்றம் தொடர்பாக நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை என்று தான் நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் பெயர் மாற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அரசு கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்