"மாணவர்களை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க வேண்டும்" - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

மாணவர்களை வேலை தேடுவபவர்களாக மட்டுமல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் உருவாக்க வேண்டும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-08 16:04 GMT

புதுடெல்லி,

மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கலந்து கொண்ட 2 நாட்கள் கலந்தாய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளத்தை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

நவீன தொழில்நுட்ப உலகில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பேசிய அவர், இந்தியா தொழில்நுட்ப ரீதியாக ஆதார், யூ.பி.ஐ., ஆன்லைன் பறிமாற்றம் என பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் தனது ஆற்றலை நிரூபித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

டிஜிட்டல் முறையில் கல்வி வழங்குவது குறித்து இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் இந்தியாவில் தற்போது தொழில் முனைவோருக்கான சாதமான சூழல் நிலவி வருவதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்கும் வகையில் அவர்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்