கல்லூரி நிகழ்ச்சியில் நடனம் ஆடியபோது மயங்கி விழுந்து மாணவி சாவு

டி.நரசிப்புராவில் கல்லூரி நிகழ்ச்சியில் நடனம் ஆடியபோது மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்தார்.

Update: 2023-02-17 20:40 GMT

மைசூரு:-

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பி.யூ.சி. கல்லூரி மாணவி மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா டவுன் பகுதிைய சேர்ந்தவர் நமிதா (வயது16). இவர் அதேப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. அதில் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்ேபாது நடன நிகழ்ச்சி நடந்தது. அதில் மாணவி நமிதாவும் கலந்து கொண்டு நடனம் ஆடினார். அப்போது நடன ஆடிக் கொண்டிருந்த நமிதா திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் சக மாணவிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னா் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மயங்கி கிடந்த நமிதாவை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது நமிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவருடன் படித்த மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுபற்றி நமிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கல்லூரிக்கு சென்று நிர்வாகத்தினரிடம் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து கேட்டனர். அதற்கு நிர்வாகத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து அவர்கள் டி.நரசிப்புரா டவுன் ே்பாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவி இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் உறவினரிடம் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்