டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் நில அதிர்வு
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.;
புதுடெல்லி,
நேற்று இரவு வட இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சீனாவில் நேற்று இரவு 11.29 மணி அளவில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் தாக்கியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.