உ.பி. இளைஞர்கள் வரலாறு படைத்து வருகின்றனர்; முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதம்
உத்தரபிரதேச இளைஞர்கள் வரலாறு படைத்து வருகின்றனர் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தரபிரதேச பாஜக இளைஞரணி பிரிவின் 3 நாள் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி, நேற்று நடந்த நிகழ்சியில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது;
நாட்டின் சட்டங்களை மதிப்பவர்களை நாம் மதிப்போம். உத்தரபிரதேச இளைஞர்கள் எப்போதுமே வரலாறு படைத்துள்ளனர். வரலாறு படைத்தும் வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளுடனும் சில இளைஞர்கள் இணைந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு பொதுவெளியில் எந்த மதிப்பு உள்ளது. அராஜகம், தீ வைப்பு மற்றும் கொள்ளையடிக்கும் கலாச்சாரம் அவர்களிடம் உள்ளது. ஆனால், பாஜகவுடன் இணைந்துள்ள இளைஞர்களிடம் நாட்டுபற்று, நேர்மறை அனுகுமுறை, வளர்ச்சி உள்ளது' என்றார்.