கேரளாவில் வந்தே பாரத் ரெயிலின் மீது கற்கள் வீச்சு...ஜன்னல் கண்ணாடி உடைந்தது

கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீச்சு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.;

Update: 2023-05-01 23:43 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீச்சு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கேரளா மாநிலத்தின் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா மற்றும் திருர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தாக்குதல்காரர்கள் ரயிலின் சி4 பெட்டி மீது கற்களை வீசி கடுமையாக தாக்கினர். இதில் ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லப்புரம் காவல் துறை விசாரணையை துவங்கி, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ரயில்வே காவல்துறையும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பவம் நடைபெற்ற பகுதியின் கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்