தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சந்திரமவுலி (வயது 38). இவர், சிறு, சிறு குற்றங்களிலும் சந்திரமவுலி ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக கடந்த 4 மாதத்திற்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் சந்திரமவுலியை மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருந்தனர். கிராமத்தில் உள்ள தோட்டத்தின் முன்பாக சந்திரமவுலி உடல் கிடந்தது. சந்திரமவுலியுடன் இருந்த முன்விரோதம் காரணமாக, அவரது நண்பர்களே இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கக்கலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களை தேடிவருகிறார்கள்.