பங்குச் சந்தை நிலவரம்: தொடா்ந்து 7-ஆவது நாளாக சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக நேற்று நோ்மறையாக முடிந்தது.

Update: 2022-08-04 05:46 GMT

மும்பை,

பங்குச் சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக நேற்று நோ்மறையாக முடிந்தது. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கி 7வது நாள் தொடர் வளர்ச்சி பாதைக்கு வழி வகுத்து உள்ளது.

ஐடி பங்குகளில் நேற்றைய வர்த்தகத்தில் பெற்ற அதிகப்படியான முதலீடுகளும் ஆசிய சந்தையில் ஏற்பட்ட உயர்வும், இன்று வர்த்தகம் உயர்வுடன் துவங்க முக்கியக் காரணமாக அமைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 58650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 480 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி வருவது முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது என்றும் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து விட்டால் பங்குச் சந்தை ஏற்றம் காணும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

Tags:    

மேலும் செய்திகள்