பங்கு சந்தை நிலவரம்; நேற்றைய சரிவில் இருந்து மீண்டது

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு நேற்றைய சரிவில் இருந்து இன்று மீண்டு 487.49 புள்ளிகள் உயர்வடைந்து உள்ளது.

Update: 2022-08-30 05:48 GMT



மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு நேற்றைய சரிவில் இருந்து மீண்டு உயர்வை அடைந்தது. இதன்படி, சென்செக்ஸ் குறியீடு 487.49 புள்ளிகள் அல்லது 0.84 சதவீதம் என்ற அளவில் உயர்வடைந்து 58,460.11 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 154.95 புள்ளிகள் அல்லது 0.89% என்ற அளவில் உயர்ந்து 17,467.85 (நேற்று 17,197.40) புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. நேற்று நிப்டியில் உள்ள அனைத்து நிறுவன பங்குகளும் சிவப்பு குறியீட்டுடனேயே காணப்பட்டன.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 47 நிறுவனங்கள் லாப நோக்கை காட்டும் வகையில் பச்சை நிறத்துடன் காணப்படுகின்றன. 3 நிறுவனங்கள் மட்டுமே சிவப்பு நிறமுடன் காணப்பட்டன.

இந்திய பங்கு சந்தைகள் சரிவில் இருந்து மீட்சியடைந்ததற்கான பிரதிபலிப்பு இது. இதனை பாராட்ட வேண்டியது முக்கியம் என கூறியுள்ள நிதி சேவை நிறுவனமொன்றின் முதலீடுகளுக்கான திட்ட தலைவர் விஜயகுமார், நிதி துறை, தானியங்கி, தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகள் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வலுவாக உள்ளன என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்