ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் முறையீடு
வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இந்த மாதம் 4-வது வாரத்தில் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 22, 23-ந்தேதிகளில் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி தெரிவித்திருந்தது.
இதனிடையே அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ரத்து குறித்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தொடங்கியதால், வேதாந்தா மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இந்த மாதம் 4-வது வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.