மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு எந்த மாநிலத்தையும் நடத்தவில்லை - உள்துறை மந்திரி அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி அரசு, எந்த மாநிலத்தையும் மாற்றாந்தாய் போல் நடத்தவில்லை.

Update: 2022-06-02 16:22 GMT

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜீன் மாதம் 2-ந் தேதி தெலுங்கானா பிாிக்கப்பட்டது. தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு இன்று 8-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி, தெலுங்கானா மக்களுக்கு பிரதமா் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோா் வாழ்த்து தொிவித்து உள்ளனா்

இந்த நிலையில், இன்று தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது அமித்ஷா பேசியதாவது;-

"மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தெலுங்கானா மக்களை மத்திய அரசு ஒருபோதும் பார்த்ததில்லை. பிரதமர் நரேந்திர மோடி அரசு, எந்த மாநிலத்தையும் மாற்றாந்தாய் போல் நடத்தவில்லை. தெலுங்கானாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.2,52,202 கோடி செலவழித்துள்ளது.

தெலுங்கானா உருவான வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. பல ஆண்டுகளாக, அதன் இளைஞர்கள் தெலுங்கானா அமைப்பதற்காக போராடி தியாகம் செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் உருவாகிட பாஜக எப்போதும் ஆதரவளித்தது. ஆனால், தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய விதம், கசப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டது. இறுதியில், 2 ஜூன் 2014 அன்று, இந்தியாவின் புதிய மாநிலமாக தெலுங்கானா உருவாக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் எப்போதும் தெலங்கானா உள்ளது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மாநில மக்களிடம் இருந்து எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்