பெங்களூரு விதான சவுதாவில் பசவண்ணர்-கெம்பேகவுடா சிலைகள்; உள்துறை மந்திரி அமித்ஷா திறந்து வைத்தார்

பெங்களூரு விதான சவுதாவில் பசவண்ணர்-கெம்பேகவுடா சிலைகளை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்து வைத்தார்.

Update: 2023-03-26 21:18 GMT

பெங்களூரு:

பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் 12-ம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதி பசவண்ணர், பெங்களூருவை நிர்மாணித்த கெம்பேகவுடா ஆகியோருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அந்த சிலைகளை திறந்து வைத்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சபாநாயகர் காகேரி, மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, பெஜாவர் மடாதிபதி உள்ளிட்ட பல்வேறு மடங்களின் மடாதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கர்நாடக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமித்ஷா வருகையை முன்னிட்டு விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்