'தொகுதிகள் மறுவரையறை செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை' - மத்திய அரசு விளக்கம்

தொகுதிகள் மறுவரையறை செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.;

Update: 2023-03-23 17:15 GMT

புதுடெல்லி,

கடந்த 2008-ம் ஆண்டு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட நிலையில், தொகுதிகள் மறுவரையறைக்காக பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகவும், தொகுதிகள் மறுவரையறை செய்வதில் மாநில அரசுகளின் பங்கு என்ன, அடுத்த தொகுதி மறுவரையறை எப்போது செய்யப்படும் எனவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்மராவ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, தொகுதிகள் மறுவரையறை செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே போல், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்